--- --:--:-- --

கயிற்றில் தொங்கிய நிலையில் முதியவர் சடலம்

550321-suicide-1

மேட்டூர் அணை அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் வலது கரையை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் அடையாளம் தெரியாத முதியவர் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அந்த இடத்தில் எலிமருந்து பாக்கெட் , தண்ணீர் பாட்டில் இருந்துள்ளன.

 

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முதியவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon