--- --:--:-- --

திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம்..!

01

மிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் திமுக அரசு 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது.

 

இந்நிலையில், தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கடன் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாகவும், அதிகமான வட்டியை செலுத்தி வருகிறோம் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

 

 

அதேபோல், பெண்களின் திருமண நாளில் அரசின் சார்பில் எட்டு கிராம் தங்கம் நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அண்ணனின் சீராக வழங்கப்படும். இதற்காக 812 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்தார்.

 

 

மேலும், பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள் மற்றும் நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும் என்றும் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி, உணவு, சீருடைகள், தங்குமிடம், பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்தார்.

 

மொத்தம் பள்ளி கல்வித்துறைக்கு 44,527 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon