பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6) நடைபெற்று வரும் நிலையில், அமித் ஷா ட்விட்டரில் பீகார் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“பீகார் வாக்காளர்களே, குறிப்பாக இளைஞர்களே, இன்று நடைபெறும் முதற்கட்டத் தேர்தலில் நீங்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் ஒவ்வொரு வாக்கும், பீகாரில் ‘ஜங்கில் ராஜ்’ (வன ஆட்சியின்) திரும்புவதைத் தடுத்து, நல்லாட்சியைத் தக்கவைக்கவும், வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட பீகாரை உருவாக்கவும் வழி வகுக்கும்.
ஊடுருவல்காரர்களுக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பில் விளையாடுபவர்களுக்கு இந்தத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்.
மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நவீன கல்வி வழங்குதல், ஏழைகளுக்கு நலன் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதுடன், பீகாரின் பெருமையை மீட்டெடுப்பதில் உங்கள் வாக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கும்.”
மேலும் செய்திகள் :
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
பிகார் தேர்தல் - 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
உற்பத்தியின் தலைமையிடம் தமிழ்நாடு - அமைச்சர் டிஆர்பி ராஜா
உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டால் ரூ. 10,000 அபராதம்..!






