வார கடைசியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

க்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தீபாவளிக்கு பிறகு கணிசமாக குறைந்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைத் சந்தித்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் கடந்த 8 ஆம் தேதி ஒரு சவரன் 90 ஆயிரம் ரூபாயைத் தாண்டிய நிலையில், கடந்த 17 ஆம் தேதி ஒரு சவரன் 97 ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டது.

 

நேற்று அக்டோபர் 24ஆம் தேதி மாலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.11,4000க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி இன்று அக்டோபர் 25ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,500க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,625க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.170க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.