நேபாள் வன்முறை: இந்திய பெண் உள்பட 51 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் Gen Z போராட்ட குழுவின் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு இந்திய பெண்மணி, 3 போலீசாரும் அடக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அதேபோல், Gen Z போராட்ட குழுவிற்கும், ராணுவத்திற்கும் இடையேயான 2-வது கட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் இடைக்கால அரசை அமைப்பது, நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.