--- --:--:-- --

வெளியான பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல்!

1

மிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மாநிலத்தின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். 2026ஆம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்வு பெரிய கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது பாஜக மாநில தலைவர், மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

 

தமிழ்நாடு பாஜகவில் இளைஞரணி மாநிலத் தலைவர், மகளிர் அணி தலைவர், பொருளாளர், இணை பொருளாளர், தலைமைச் செய்தித் தொடர்பாளர், பொதுச் செயலாளர், மாநிலச் செயலாளர்கள், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட 19 அமைப்புகளுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள 19 அமைப்புகளுக்கான நிர்வாகிகள் பட்டியலில் மொத்தம் 50 நபர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, மாநில பொதுச் செயலாளராக (அமைப்பு) கேசவ விநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் துணைத் தலைவர்களாக 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, குஷ்பு உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன.

 

மாநிலச் செயலாளர்களாக வினோஜ் பி செல்வம், அஸ்வத்தாமன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில பொதுச் செயலாளர்களாக ராம ஸ்ரீநிவாசன், முருகானந்தம் உள்ளிட்ட ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மாநிலத் தலைமைச் செய்தித் தொடர்பாளராக நாராயணன் திருப்பதி, மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி. ராகவன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகர், மாநில இளைஞரணித் தலைவராக எஸ்.ஜி. சூர்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மாநில நிர்வாகிகள் நியமித்திருப்பது தொண்டர்களை இன்னும் ஆர்வமாக பணி செய்ய வைக்கும் என பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

Right Menu Icon