நாளை சபரிமலை கோயில் நடை திறப்பு..!
சபரிமலை கோயில் நடை மகர விளக்கு பூஜையை ஒட்டி நாளை திறக்கப்பட உள்ள நிலையில் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை முதல் திறக்கப்படுகிறது.
கோயில் திறந்து பின்னர் கோயிலின் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு அன்றைய தினம் மீண்டும் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
மண்டல பூஜை அடுத்த மாதம் 27ஆம் தேதியும், மகர விளக்க பூஜை ஜனவரி மாதம் 15 ஆம் தேதியும் நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் முன்பதிவு செய்து மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





