தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை…!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.

 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழை பெய்யும் இடங்கள்: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதே போன்று, வெள்ளிக்கிழமையன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.