வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு உத்தரவு..!
வண்டலூரில் உயிரியல் பூங்காவில் 3d 7d திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்லுயிர் தொடர்பான பல்வேறு விஷயங்கள் இதில் இடம் பெற்று இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா தியேட்டர் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
ரூபாய் 4.3 கோடி செலவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா தியேட்டர் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.






