--- --:--:-- --

டெல்லி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி, பாஜக பெண் உறுப்பினர்களிடையே மோதல்..!

5

டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக பெண் உறுப்பினர்கள் மீண்டும் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிகழ்ந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு டெல்லி மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சலி ஓபராய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இதனையடுத்து இரண்டாவது நாளாக நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அடிதுடி ஏற்பட்டது. பெண் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து சண்டையிட்டதால் களேபரமானது. இரு கட்சி உறுப்பினர்களும் தாக்கிக் கொண்டதால் ஒருவர் மயங்கி விழுந்தார்.

Right Menu Icon