கபடி விளையாட மைதானம் சென்று பிணமாக வெளியே வந்த மாணவி..!
ஓசூர் அருகே கபடி விளையாட்டின் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
இது சம்பந்தமாக 10 போட்டிகளில் பங்கேற்ற சங்கீதா என்ற பத்தாம் வகுப்பு மாணவி அனைத்திலும் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அங்கு நடந்த கபடி போட்டியில் விளையாடிய போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





