கஞ்சா விற்பனை செய்த 60 வயது மூதாட்டி கைது..!
திருச்சி அருகே கஞ்சா விற்பனை செய்த 60 வயது மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் ராஞ்சி நகரை சேர்ந்த 60 வயது மூதாட்டி முழுமதி என்பவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது 110 கிராம் கஞ்சாவை மூதாட்டி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் முழு நேர கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





