தீக்கிரையான அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!

மெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து நேரிட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கரும்புகை விண்ணை முட்டின. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டதாகவும், வீடுகள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் குலுங்கியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

 

வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, டெக்சாஸ் வளைகுடா கடற்கரைக்கு அருகிலும், டெக்சாஸ் – லூசியானா எல்லையிலும் அமைந்திருக்கிறது. இந்த வலேரோ சுத்திகரிப்பு நிலையம், ஒருநாளைக்கு சுமார் 3,80,000 பீப்பாய்கள் அளவுக்கான கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறன் கொண்டது எனத் தகவல் தெரிவிக்கின்றன.