திருப்பதி பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

திருப்பதியில் இலவச தரிசனம், 300 ரூபாய் கட்டன தரிசனம் உள்ளிட்ட பல வகை தரிசனங்கள் மூலம் பக்தர்கள் ஏழுமலையான வழிபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்துக்கான தரிசன டிக்கெட்களை பெற்றவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றாலோ, அல்லது முன்கூட்டியோ சென்றாலும் சாமி தரிசனக்குக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

 

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தரிசன டோக்கன் வைத்துள்ள பக்தர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சாமியை தரிசிக்க வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த முறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வர வேண்டாம் எனவும், அப்படி வரும் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் தரிசனத்தை எளிதாக்கவும், நெரிசலைத் தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.