தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், 3 முதல் 5 நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதன்படி இன்னும் 3 முதல் 5 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என சொல்லப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அசாமில் இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் ஐந்து மாநில தேர்தலுடன் சில மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள் :
சென்னையில் பிரீமியம் ஏசி மின்சார பேருந்துகள் அறிமுகம்..!
புதுச்சேரி வக்பு வாரியத்தில் இந்துக்கள் நியமனம்..!
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மதுரையில் விறகு விலை உயர்வு..!
கடலூரில் வணிக சிலிண்டர் முழுமையாக நிறுத்தம்..!
வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - அமைச்சர் சக்ரபாணி ஆலோசனை
சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையில் தமிழக அரசு மட்டும் 55% வரி விதிக்கிறதா?






