பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்..!

லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமா நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக கொண்ட ஸ்ரீனிவாசன் உடல்நல குறைவால் காலமானார்.

 

50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்த ஸ்ரீனிவாசன் 225 படங்களில் நடித்துள்ளார். உடல் நல பிரச்னையால் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து வந்த ஸ்ரீனிவாசன் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 69. தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

 

லேசா லேசா படத்தில் இவரின் காமெடி காட்சிகளை யாராலும் மறக்க முடியாது. இயல்பான நடிப்பு மற்றும் முகபாவனைகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். மலையாள சினிமாவில் பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரிக்கு அருகிலுள்ள பட்டியத்தில் ஏப்ரல் 6, 1956 அன்று பிறந்தவர் ஸ்ரீனிவாசன். மலையாள சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இருந்து வந்தார். ஸ்ரீனிவாசன் ஒரு தேசிய விருது, இரண்டு ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் 6 முறை கேரள அரசு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.