தங்கம் விலையில் திடீர் சரிவு..!
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும்நிலையில், நேற்று முன் தினம் முதல் முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
கடந்த 2 நாட்களும் தங்கம் விலை உயர்ந்தாலும் ரூ.1 லட்சத்தை தாண்டாமல் இருந்தது. அதன் படி நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,440க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,380க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.99,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.10,330க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.82,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.221க்கும் கிலோவுக்கு ரூ.3000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,21,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




