--- --:--:-- --

த.வெ.க-வில் அழைப்பு இல்லை – எல்.ஜே.கே-வில் இணைந்த தாடி பாலாஜி

9

கைச்சுவை நடிகரான தாடி பாலாஜி, பிரகாஷ்ராஜ் மற்றும் சுஹாசினி நடித்த நந்தினி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதன்பின் சன் தொலைக்காட்சியில் மாயா மச்சீந்திரா தொடரில் எம்.எஸ்.பாஸ்கருடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

 

அதைத்தொடர்ந்து, பல திரைப்படங்களில் நடித்தார். மேலும், விஜய் டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், தாடி பாலாஜி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கரூர் சம்பவம் தொடர்பாக அவர் பேசுகையில், விஜயை என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் தவறாக வழிநடத்துவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.

 

ஆனால், அவருக்கு கட்சியில் பதவி வழங்கப்படாமல் போனதால் அவ்வாறு குற்றம் சாட்டுவதாக த.வெ.க-வினர் தெரிவித்தனர். இந்த நிலையில், த.வெ.க ஆதரவாளரான நடிகர் தாடி பாலாஜி, தற்போது லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார்.

 

அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை இன்று புதுச்சேரியில் நேரில் சந்தித்த அவர், தன்னை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டார். அவருடன் புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர்கள் லியோகுமார், சுனில்குமார், குமரன் மற்றும் சிவராமன் ஆகியோரும் இணைந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon