--- --:--:-- --

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

1

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும்நிலையில், நேற்று ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. காலையில் மட்டுமே சவரனுக்கு ரூ.720 உயர்ந்த நிலையில் தொடர்ந்து மாலையிலும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டி பலரையும் வாயை பிளக்க செய்தது.

 

கடைசியாக நேற்று 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,515க்கும், ஒரு சவரன் ரூ.1,00,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

 

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.12,350க்கும் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு சவரன் ரூ.98,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.10,300க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.82,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.211க்கும், ஒரு கிலோ ரூ.2,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon