--- --:--:-- --

தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

4

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழ்நாடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்றும், அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையில் அதிகாலையில் லேசான பனி மூட்டம் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon