தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கே வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் முருகமலை, தாமரைக்குளம், வடுகபட்டி, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி மற்றும் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் வெளிப்பாளையம், காடம்பாடி, பால் பண்ணைச்சேரி, நாகூர், தெத்தி, சங்கமங்கலம், பாலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்கியது.
திண்டுக்கல் மற்றும் தாடிக்கொம்பு, அகரம், செட்டி நாயக்கன்பட்டி, சிறு நாயக்கன்பட்டி, அங்கிங்கு நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கொடைக்கானலில் கனமழை வெளுத்து வாங்கியது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் - கார்த்தி சிதம்பரம்






