தங்கம் விலை உயர்ந்ததா..?
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு கொண்டு உயர்ந்து புதிய வரலாறு காணாத விலையை தொட்டு வருகிறது.டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தொடர்ந்து நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.12,040க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,060க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,055க்கும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டுமே கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.201க்கும், ஒரு கிலோ ரூ.2,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




