ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க வலியுறுத்தல்

பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க, தே.மு.தி.க, ம.தி.மு.க, பா.ஜ.க, த.வா.க, ம.நீ.ம, ஐ.யூ.எம்.எல், ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றுள்ளன. இதில் வி.சி.க சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ். பாலாஜி பங்கேற்றனர்.

 

இதில் சிந்தனைச் செல்வன் “தமிழ்நாட்டில் ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும். இதனால், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.