இன்று முதல் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருள் விநியோகம்..!

தாயுமானவர் திட்டத்தில் இன்றுமுதல் நவ.6 வரை வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருள் தரப்படுகிறது. தாயுமானவர் திட்டத்துக்கான வயது வரம்பு 70-லிருந்து 65ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

தாயுமானவர் திட்டத்தில் 20.42 லட்சம் மூத்த குடிமக்களும் 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயன் பெறுகின்றனர்.