இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?

மிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

 

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு (அக்டோபர் 21-23) தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். ​

 

வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடதமிழகம் – தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை நோக்கி நகரும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6.30 மணி நேர நிலவரப்படி ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக அடுத்த மாதம் 15 ஆம் தேதியன்று வேலை நாளாக அறிவித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.