சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு..!

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும் இடத்திற்கே உணவை எடுத்து வந்து சாப்பிடுவதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.

 

முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 29 ஆயிரத்து 455 தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்றும், 512 இடங்களில் உணவு பரிமாறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்காக, மூன்று ஆண்டு காலத்திற்கு, 186 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவிடப்பட இருப்பதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.