கனமழையில் இடிந்து விழுந்த வீடு – 12 வயது சிறுமி உள்பட 4 பேர் பலத்த காயம்

டலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கனமழை காரணமாக ரெட்டிக்குப்பம் பகுதியில் பழமையான தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி உள்பட நான்கு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

 

இடிபாடுகளில் சிக்கிய நால்வரையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.