வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகியவற்றில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை கன முதல் மிக கனமழை கொட்டித் தீர்த்தது.
தஞ்சாவூரில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை மற்றும் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் சுமார் 10,000 ஏக்கரில் நீரில் மூழ்கின. திருவாரூரில் 25,000 ஏக்கர் குறுவை மற்றும் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. நாகப்பட்டினத்தில் சுமார் 50,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. மயிலாடுதுறையில் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
மேலும் செய்திகள் :
நாளை பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு
சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை - நயினார் நாகேந்திரன்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது? - வெளியான முக்கிய தகவல்
ஆமைகள் மறுவாழ்வு மையம் - டெண்டர் கோரிய தமிழக அரசு
அக்.30, 31 தேதிகளில் RTE மாணவர் சேர்க்கை..!






