மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு..!

ள்ளிகளில் யுபிஐ மூலம் கல்விக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறைகளை பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.கொரோனா பொதுமுடக்க நேரங்களில் ஏடிஎம்மில் பணம் எடுப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால், யுபிஐ எனப்படும் செல்போன் செயலிகள் மூலம் பணம் மாற்றும் நடைமுறை அதிகரித்தது.

 

தற்போது அது விஸ்வரூபம் எடுத்து, சாலையோர கடைகள் தொடங்கி பெரும்பாலான இடங்களில் யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் முறையே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது.அந்த வகையில், பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதிலும் இந்த நடைமுறையை புகுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

 

அதில், பள்ளிகளில் கல்வி கட்டணம், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பணமாக வசூலிக்காமல் யு.பி.ஐ. செல்போன் வாலட்டுகள், நெட்பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பெற்றோருக்கு பணம் செலுத்தும் வசதியும் எளிமையாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

அதாவது பள்ளிக்கு செல்லாமலேயே பெற்றோர்கள் வீட்டில் இருந்தே பணம் செலுத்த முடியும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.