நாய் கடித்து 22 பேர் மரணம்.. தமிழகத்தில் அதிர்ச்சி

நாய்க்கடி தொடர்பான அதிர்ச்சிக்குரிய தகவலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இந்தாண்டில் 8 மாதங்களில் மட்டும் 3.60 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் பாதிப்பால் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாய் கடியை தடுப்பதற்கும், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.