ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரி, ஆசனூர் அருகே சென்றபோது காட்டு யானை ஒன்று வழிமறித்தது.
லாரியில் இருந்த கரும்புகளைத் தனது தும்பிக்கையால் பறித்துச் சாப்பிட்டதால், சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.