கர்நாடகாவில் வரும் 22-ம் தேதி முதல் புதிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில CM சித்தராமையா அறிவித்துள்ளார். புதிய கணக்கெடுப்பு சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் எடுக்கப்படும் எனவும், 2015-ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு செல்லாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிஹார், தெலங்கானாவில் மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தின. தமிழ்நாட்டிலும் இத்தகைய கோரிக்கை உள்ளது.