எனது உடலில் ரத்தம் ஓடுவதற்கு பதில் சூடான சிந்தூர் ஓடுகிறது – பிரதமர் மோடி

னது உடலில் ரத்தம் ஒடுவதற்கு பதில் சூடான சிந்தூர் ஓடுகிறது என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

 

இதில், ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் 103 ரயில்நிலையங்களை மேம்படுத்தம் பணி நிறைவடைந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் சென்ற பிரதமர் மோடி, சென்னை பரங்கிமலை, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், சிதம்பரம், சாமல்பட்டி, திருவண்ணாமலை, போளூர், குழித்துறை ஆகிய தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட 9 ரயில்நிலையங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

 

அம்ரித் பாரத் ரயில் நிலையங்களில் ரூப் பிளாஸா, உணவு விடுதிகள், சிறுவர் விளையாட்டுப் பகுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் தனித்தனி உள் நுழையும் மற்றும் வெளியேறும் வாசல்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தப்பகுதி, மின்தூக்கி, மின்னுயர்த்தி, எக்சிகியூட்டிவ் லான்ஜ், காத்திருப்புப் பகுதி, டிராவலேட்டர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

 

இதனை தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும், மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்பதை, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு உணர்த்திருப்பதாக கூறினார். மேலும் தனது உடம்பில் ஓடுவது ரத்தம் அல்ல, சூடான குங்குமம் என்றும் ஆவேசமாக பேசினார்.