10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

TN Board TNDGE SSLC, HSE +1 Result 2025 Live Updates: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (TNDGE) 2025ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகளை இன்று, மே 16, 2025 அன்று காலை 9:00 மணிக்கு வெளியிட உள்ளது. செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ இணையதளங்களில் காலை 9:10 மணி முதல் தேர்வு முடிவுகளை பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

 

தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது: மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.’TN SSLC Result’ மொபைல் செயலி மூலமாகவும் உங்கள் முடிவைப் பார்க்கலாம். செயலியைப் பதிவிறக்கி, தேர்வு முடிவு இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளிடவும். அதுமட்டுமின்றி தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமாகவும் மாணவர்களின் அளித்துள்ள மொபைல் எண்களுக்கு அனுப்பப்படும்.

 

 

தேர்ச்சி மதிப்பெண்கள்: TN SSLC தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 100க்கு 35 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதில் எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும்.