வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் ஆழ்கடல் மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் 49 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
ஆழ்கடலில் உள்ள மீனவர்களுடன் கரை திரும்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் நீடிக்கும் காற்றடித்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றமாக காணப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விருத்தாசலம், பெண்ணாடம், நெய்வேலி, வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





