--- --:--:-- --

ரவுடி கொம்பன் என்கிற ஜெகன் எண்கவுண்டர் நடந்தது என்ன..?

2.1

திருச்சி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு கொலை மற்றும் குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ரவுடி கொம்பன் ஜெகனை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

 

திருச்சி திருவெறும்பூரை அடுத்த பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் (30) என்கிற கொம்பன் ஜெகன்,பிரபல ரவுடியான இவர் மீது கொலை கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 19ஆம் தேதி ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பட்டாகத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கலந்து கொண்ட கூட்டாளிகள் ஒன்பது பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

 

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சனமங்கலம் என்கிற இடத்தில் ரவுடி ஜெகன் பதுங்கி இருப்பதாக காவல்
துறையினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழுவினர் ஜெகனை பிடிக்க சென்றபோது உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கி விட்டு ஜெகன் தப்பிக்க முயன்றார் அப்போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon