ஏர்போர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது..!
சென்னை விமான நிலையத்தில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக காவல்துறையினர் கைது செய்தனர். பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சக்திவேல் 2020 ஆம் ஆண்டு உறவினர் மதன்ராஜிடம் அவரது மனைவிக்கு மத்திய அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் அவர் நண்பர் தீபக் என்பவரை சக்திவேலுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் விமான நிலையத்தில் மத்திய அரசு பணி வாங்கி தருவதாக கூறி நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தீபக் சக்திவேலிடம் வாங்கியுள்ளார்.
சிறிது நாட்களில் அவரது மனைவி பெயரில் அடையாள அட்டையும் பணி ஆணையும் வழங்கினார். இதனையடுத்து அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரிந்ததும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தீபக்கை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





