காதலன் வீட்டில் காலடி வைத்த மறு நொடி நிகழ்ந்த கொடூரம்..!
மதுரையில் காதலன் குடும்பத்தினர் தாக்கியதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், கடலூர் கிழக்கு தெருவை சேர்ந்த சின்னக்கா என்பவரும் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான பாக்கியம் என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு காதலியை, காதலன் தனது வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பாக்கியத்தின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் சின்னக்காவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காதலி வீட்டினருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காதலன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஏழு பேரை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து இளம் பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





