--- --:--:-- --

தீபாவளி சீட்டு மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய பைனான்ஸ் நிறுவனம்..!

10

உத்திரமேரூரில் செயல்பட்டு வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றும் மூடப்பட்டதால் கோடிக்கணக்கில் பண்ட் சீட்டு போட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ஏபிஆர் தனியார் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தீபாவளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் 17 பொருட்களை வாங்க பள்ளி சீட்டு போட்டனர்.

 

கடந்த சில நாட்களாக இந்த நிறுவனம் தீபாவளி முடிந்ததும் பண்ட் சீட்டுக்கான பொருட்கள் தருகிறோம் என்று ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பு இன்று பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் மூடப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon