--- --:--:-- --

அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் சாலையோர கடையில் மோதியதில் ஓட்டுநர் பலி..!

8

நாகர்கோவில் அருகே அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் சாலையோர கடையில் மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

 

இந்த மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சை அந்த பகுதியை சேர்ந்த ஜெருசலேம் என்பவர் ஓட்டி வந்தார். அதிவேகமாக நாகர்கோவிலில் இருந்து கீதா குப்பம் ஆம்புலன்ஸில் சென்றுகொண்டிருந்த பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேக்கரி கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஜெருசலேம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon