தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

மிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை நகரில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. குமரி கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.