இன்று கேரளா செல்லும் பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா செல்கிறார். கேரள மாநிலம் கொச்சிக்கு இன்று மாலை வருகை தரும் அவர் கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் சந்திப்பு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இதில் முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பின்னர் நாளை கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதனைத் தொடர்ந்து நாளை மதியம் கர்நாடக மாநிலம் மங்களூர் செல்லும் பிரதமர் அம்மாநிலத்தில் 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





