அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ள உத்தரவு..!

லங்கையில் இரண்டு நாட்களாக அரசுக்கு எதிராக வன்முறை நீடித்து வரும் நிலையில் சொத்துக்களை சேதப்படுத்துவோர்களை சுட்டு தள்ள முப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தொடங்கிய போராட்டம் தற்பொழுது வன்முறையாக மாறியது. கடந்த ஒரு மாத காலமாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

 

இதன் எதிரொலியாக நாடு முழுவதும் வன்முறை பரப்பும் நிலையில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். ஆட்சியாளர்கள் மீதான பொதுமக்களின் கோபம் தீரவில்லை. மஹிந்தவின் பூர்வீக மாளிகைகள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான 30க்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.