--- --:--:-- --

இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளாகும் அதிர்ச்சி காட்சி..!

7

புதுச்சேரியில் ஜல்லி ஏற்றிக்கொண்டு கடலூர் நோக்கி சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி வழியாக ஜல்லி ஏற்றுக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

 

நாங்குநேரி சந்திப்பு அருகே சென்ற பொழுது மற்றொரு சாலை வழியாக வந்த லாரி ஜல்லி ஏற்றி வந்த லாரியில் பின்பக்கமாக மோதியதில் டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் சாலையில் கவிழ்ந்த லாரி ஓட்டுனரும் உதவியாளரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon