--- --:--:-- --

பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம்..!

3

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவியாக இந்திய வெளியுறவுத் துறை உதவி மையங்களை அமைத்துள்ளது.

 

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று உக்ரைனில் உள்ள மாணவர்கள், இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறுகிறார். இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.

 

பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon