தென்மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..!
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கேரளாவில் இருந்து வட கர்நாடகாவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி ,தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





