கொரொனா மூன்றாவது அலை அதிகரித்து வருவதால் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தவிர்த்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நெல்லையை சேர்ந்த ஒரு நபர் தொடுத்த வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார் .
ஆகவே அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை..!
தமிழ்நாட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு..!
வீடு வீடாகச் சென்ற த.வெ.க நிர்வாகிகள்..!
வார கடைசியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தேவர் ஜெயந்தி விழாவில் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!






