பாலாற்றில் குளிக்கச் சென்ற சிறுமி உட்பட 3 பேர் பலி..!

செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றம் பள்ளி அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற சிறுமி உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸை முன்னிட்டு நேற்று சென்னையை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அச்சிரப்பாக்கம் மலை மாதா தேவாலயத்திற்கு வந்தனர்.

 

ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய லியோன்சிங் ராஜா அவரது மகள் மற்றும் அண்ணன் மகன் லிவின்ஸ்டன் எதிர்பாராதவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் படகு மூலம் மூன்று குழுக்களாகப் பிரிந்து தேடிவந்தனர்.

 

ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு சடலங்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் சிறுவன் லிவிங்ஸ்டன் சடலத்தை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் திடீரென மேலே வந்த சிறுவனின் சடலத்தை மீட்டனர்.