கல்வி தொலைக்காட்சியைப் பார்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை வைத்து வருகைப்பதிவேடு கணக்கிட முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட சந்தன குளத்தில் குடிமராமத்து பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு கொரொனா பணிகளை மேற்கொண்டதற்காக சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் காலத்தின் தேவைக்கேற்ப பாடங்களை குறைப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் வாங்க பணம் கேட்க கூடாது எனவும் அவர் பதிலளித்தார்.

மேலும் செய்திகள் :
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
விக்கிரவாண்டி அருகே இறந்து கிடந்த சிறுத்தை..!
எஸ்.ஐ.ஆர் விண்ணப்பப் படிவம் வழங்க 3 நாட்கள் மட்டுமே அவகாசம்..!
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை
பரந்தூர் விமான நிலையத் திட்டம் -1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல் நிறைவு
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு






