மும்பையில் நீண்ட நேரம் செல்போனில் வீடியோகேம் விளையாடிய சிறுவனை தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். சிவாஜி நகரை சேர்ந்த சிறுவன் தொடர்ந்து தனது செல்போனில் கேம் விளையாடுவதால் செல்போனை பறித்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டினான். நீண்ட நேரமாகியும் சிறுவன் வெளியே வராததால் பெற்றோர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது சிறுவனின் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார்.
இதையடுத்து சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள் :
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி..!
காலாவதியான குழந்தைகள் தின்பண்டங்கள் பறிமுதல்..!
பி.எம்.ஸ்ரீ' திட்டத்தில் இணைந்த கேரளா மத்திய அரசுடன் ஒப்பந்தம்..!
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடூரம்..!
ஆந்திராவில் தீக்கிரையான ஆம்னி பேருந்து.. 40 பேரில் 25 பேர் பலியான சோகம்..!






